பொள்ளாச்சி அருகே கடந்த ஆண்டு அரிசி ராஜா என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டது. யானை அரிசியை விரும்பி சாப்பிட்டதால், மக்கள் சிலர் அரிசி ராஜா என்று அழைத்தனர்.
அரிசி ராஜாவுக்கு வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது.கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அரிசி ராஜா யானை, தற்போது கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.அரிசி ராஜாவை டாப்ஸ்லிபில் உள்ள வரகழியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டு பராமரித்து வந்தனர். பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், கட்டுப்படுதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கூண்டுக்குள் இருக்கும்போது, கட்டளைக்கு அடிபணிந்த அரிசி ராஜா தற்போது வெளியில் வந்தப் பிறகு கட்டளைகளுக்கு கீழ்படிகிறதா என்று பார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.