முகப்பு
செய்திகள்

விசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அனுப்பிய அழைப்பாணையை ஏற்று, விசாரணைக்காக ஆஜராகியுள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.
பகிர்:
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியது.
அதற்காக மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தீபிகா படுகோனே இன்று முற்பகலில் வந்தார்.
பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்டோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருள் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியது
விசாரணையில் பங்கேற்பதற்காக கோவாவிலிருந்து மும்பைக்கு தனி விமானத்தில் வந்தார் தீபிகா படுகோனே.
இதே வழக்கில் தீபிகா படுகோனே மேலாளா் கரிஷ்மா பிரகாஷிடமும் என்சிபி விசாரணை நடத்துகிறது.
படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த தீபிகா படுகோனே விசாரணைக்காக மும்பை வந்துள்ளார்.
கோவாவிலிருந்து கிளம்பும் முன்பு தீபிகா, சட்ட வல்லுநர்களுடன் இந்த வழக்கு பற்றி விவாதித்துள்ளதாக அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.