செய்திகள்

தில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்

DIN
விழாவில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
விழாவில்  பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர்  வெங்கய்ய நாயுடு.
தலைநகர் தில்லியில், முப்படை அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற்றன.
நாட்டின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்.
ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக ராணுவ வீரர்கள் அதிநவீன ஆயுதங்களுடன் அணிவகுத்து வந்தனர்.
விழாவில் பங்கேற்ற ரஃபேல், ஜாகுவர் மற்றும் மிக்-29 விமானங்கள்.
இந்தியக் கடற்படை வலிமையை எடுத்துரைக்கும் வகையில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மாதிரியுடன் வாகனம் அணி வகுத்துச் செல்ல பெண்கள் பரத நாட்டியம் ஆடினர்.
கர்நாடக மாநிலத்தின் சார்பில் இடம் பிடித்த அலங்கார ஊர்தி.
பாரம்பரிய முறைப்படி விழாவில் கலந்து கொண்ட மகாராஷ்டிரத்தின் அலங்கார ஊர்தி.
பாரம்பரிய நடனத்துடன் சூரிய கோவில் வடிவம் கொண்டு வந்த குஜராத்தின் அணிவகுப்பு ஊர்தி.
பிரம்மாண்ட நந்தி உருவம் தாங்கிய ஆந்திர மாநிலத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்தி.
சிக்கிம் மாநிலத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் வந்த அலங்கார வாகனம்.
மேற்கு வங்கம் சார்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
திரிபுரா மாநிலத்தின் சார்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
கரோனா தடுப்பூசியை விவரிக்கும் வகையில் சிறப்பான அலங்கார ஊர்தி பங்கேற்றது.
ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
கேரள மாநிலத்தின் சார்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
தலைநகர் தில்லியின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் வந்த அலங்கார வாகனம்.
முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் வந்த அலங்கார வாகனம்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் பெருமையைப் பறைசாற்றும் வாகனம்.
பாரம்பரிய இசை வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் அலங்கார ஊர்தி.
அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி அமர்ந்து இருக்கும் தில்லி முதல்வர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT