முகப்பு
செய்திகள்

அரசு நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் - படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தப்படி தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், சாதாரண கட்டண அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிர் பயணிக்க கட்டணமில்லா வழிவகை செய்து உத்தரவிட்டுள்ளார்.
பகிர்:
சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் பெண்கள்.
அரசு பேருந்தில் 'மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை' என்ற வாசகம் ஓட்டிய பேருந்து.
பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பயணிக்கலாம்.
இனி பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைவரும் கட்டணமில்லாமலும் பயணிக்கலாம்.
பணிக்கு சென்று வரும் பெண்கள், பயணச் செலவுக்கே அதிகம் செலவிட்டு வந்த நிலையில், தமிழக அரதின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஆணையால் பேருந்துகளில் பயண அட்டை இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் பெண்கள்.
தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் பெண்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
மகிழ்ச்சியில் பெண்கள்.
கடலூா் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்ட பெண்கள்.
மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்ததை தொடா்ந்து இலவசமாக சென்னை மாநகர பேருந்துகளில் பயணித்த பெண்கள்.
வள்ளியூரில் இருந்து கூத்தங்குழிக்கு சனிக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவசம் என ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கா்.
மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம் என்று அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.