வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்
நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை நாக்பூர் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அதே ரயிலில் பிரதமர் மோடியும் பயணம் மேற்கொண்டார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில் நிலைத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்கும் முன் ஒட்டுனருடன் உரையாடும் பிரதமர் மோடி.
நாக்பூரில் உள்ள ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை விரைவு ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி.
மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.
உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி நாக்பூர்-பிலாஸ்பூர் வழித்தடத்தில் ஆறாவது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிக்கும் பொதுமக்களிடம், புதிய ரயிலில் உள்ள வசதிகளை கேட்டறிந்த பிரதமர் மோடி.
மாணவர்களுடன் இணைந்து விரைவு ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி.
மக்களுடன் சுவாரஸ்யமாக கலந்துரையாடிய பிரதமர் மோடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.