கோவாவின் மார்செல் கிராமத்தில் உள்ளூர் மக்கள் 'சிக்கல் கலோ' என்று அழைக்கப்படும் பாரம்பரிய மண் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மார்சலில் நடைபெற்ற மருத்துவப் பலன்கள் நிறைந்ததாக நம்பப்படும் மண் திருவிழாவில் அனைத்து வயதினரும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.சேற்றில் விளையாடி ஒருவரையொருவர் தெறித்துக்கொள்ளும் சிக்கல் காலோ கடந்த நான்கு நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.கலகலப்பான நடனத்துடன் திருவிழாவில் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம் பெற்றது.இந்த திருவிழா பக்தர்களை பூமியுடன் இணைக்க உதவியது என்றனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் மற்றும் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.