உள்நாட்டுப் போரின் போது கொலை, கற்பழிப்பு மற்றும் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானிய போராளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நான்கு பேரை சித்திரவதை செய்து தூக்கிலிட்ட வங்கதேச கொரில்லா படையினர். Horst Faas
ஏப்ரல் 2, 1971ல் ஆயுதமேந்தி செல்லும் கிழக்கு பாகிஸ்தான் போராளிகள்.வங்கதேசத்தில் உள்ள யூரிர் சார் பகுதியில் மே 24, 1985 தேதியன்று வீசிய பேரலையில் தப்பிப்பிழைத்த ஒரு குழுவினர் உதவிக்காக காத்திருப்பு.இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உடன் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் நட்பு, ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கான 25 ஆண்டு ஒப்பந்தத்தில் மார்ச் 19, 1972 அன்று கையெழுத்திட்டனர். ஏப்ரல் 27, 1989 அன்று ஏற்பட்ட சூறாவளிக்கு பிறகு, இடிபாடுகளுக்கு நடுவில் தனது மகளுக்கு பால் கொடுக்கும் தாய்.சுதந்திரப் போர் சம்பந்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி டாக்காவில் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணி.ஜனவரி 11, 1972 அன்று நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய வங்கதேசத்தின் முன்னாள் தேசியவாத தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மான். ஜூன் 12, 1996 நடைபெற்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, குண்டடிபட்ட நபரை மருத்துவமனைக்கு சைக்கிள் ரிக்ஷாவில் அழைத்து செல்லும் நபர்.நிலோய் சோட்டோபாத்யாயின் இறுதிச் சடங்கின் போது, அவரது கால்தடத்தை காகிதத்தில் பதித்துக் கொண்ட உறவினர்கள்.1988 செப்டம்பரில் வங்கதேசத்தில் உள்ள குர்மிடோலாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தப்பிக்கொள்ள ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்யும் உள்ளூர்வாசிகள்.1974ல் வங்கதேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தாயும் அவருடைய குழந்தையின் அவல நிலையும்.வங்கதேசத்தில் ஜூன் 30, 1974 அன்று நடைபெற்ற ஒரு சந்திப்பில் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் உடன் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகார் பூட்டோ.டாக்கா அலுவலகத்திலிருந்து பேட்டி கொடுக்கும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா.ஜூன் 3, 1978 அன்று டாக்காவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமான்.வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் முகமது எர்ஷாத்தை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற அரசு விருந்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சர். டாக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு.டாக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத் மற்றும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா.டாக்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆதரவாளர்களுடன் பங்கேற்ற முன்னாள் பிரதமர் கலீதா ஜியா.வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா.ஜூலை 16, 2007 அன்று தொழிலதிபரிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவாமி லீக் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா. ஆகஸ்ட் 5, 2024 அன்று பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜிநாமா செய்தி கேட்டு கொண்டாடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்.