பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானது. -
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வெள்ளாடு, செம்மறி ஆடுகளை ஆடு வளர்ப்பவர்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு சந்தையில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.ஆடுகள் உடல் எடை மற்றும் ரகங்களுக்கு ஏற்றவாறு 5 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது.பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் அதிகளவில் கொண்டுவரப்பட்டு வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய வாரச் சந்தைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.சென்னையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடை சந்தையிலிருந்து வாங்கப்பட்ட ஆடுகளை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் மூலம் எடுத்துச் செல்லும் வியாபாரி ஒருவர்.லக்னோவின் பழைய நகரப் பகுதியில், விற்பனைக்கு தயாரான உள்ள ஆடுகள்.அமோகமாக விற்பனையான ஆடுகள்.புளியம்பட்டி கால்நடை சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.10 கிலோ கொண்ட ஆட்டுக் கிடாய் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.