இந்தியாவின் முதலாவது வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத் - பூஜ் இடையே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நமோ பாரத் ரேபிட் ரயிலில் 1,150 பயணிகள் அமர்ந்தும், 2,058 பயணிகள் நின்றுகொண்டும் பயணிக்க முடியும்.அகமதாபாத்தில் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், ரயிலில் பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்ட ரயில், வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படவுள்ளது.அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த ரயில் கவாச் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், ரயிலில் பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.இந்த ரயில் இந்திய அரசின் மேக் இன் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது.வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.