தனி விமானம் மூலம் ரஷியாவிலிருந்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக புதுதில்லி வந்த ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கு, அணிவகுப்பு மரியாதையுடன் ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி. Grigory Sysoyev
ரஷியாவிலிருந்து புதுதில்லியில் உள்ள பாலம் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அதிபர் புதினை ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் பிரதமர் நரேந்திர வரவேற்றார்.ஒரே காரில் பயணித்த பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்.ரஷ்ய அதிபர் பாதுகாப்பு படையினர், இந்திய தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்னல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.புதுதில்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று அதிபர் விளாதிமீர் புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.அதிபர் விளாதிமீர் புதின் வருகையையொட்டி பல்வேறு இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.சம்பிரதாய முறைப்படி அதிபர் புதினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.சம்பிரதாய முறைப்படி அதிபர் புதினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, ராணுவம் தொடர்பாகவும், ரஷியா - உக்ரைன் இடையேயான போர், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இருவரும் உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ரஷியாவின் எஸ் - 400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவுகள் குறித்தும் தலைவர்கள் உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சம்பிரதாய வரவேற்பு நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் உயர் அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் திரெளபதி உடன் பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் அதிபர் விளாதிமீர் புதின் உடன் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.புதுதில்லியில், இந்திய வருகைக்கு முன்னதாக, கர்தவ்ய பாதையில் ரஷ்ய அதிபர் புதினின் சுவரொட்டிகள்.வாரணாசியில் கங்கா ஆரத்தியின் போது, ஏற்றப்பட்ட தீபம்.