பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி புனித நதிகள் சங்கமமான திரிவேணி சங்கமத்தின் நதிகரையில் நீராடும் பக்தர்கள். -
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ இடத்தில் குவிந்த பக்தர்கள்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பிரமாண்ட நிகழ்வு, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஆன்மீக மரபுகளை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.பிரயாக்ராஜில் பக்தர்கள் கூட்டம்.ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் மஹா கும்பம் திருவிழா நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற மகா கும்பமேளா உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடும் பிரம்மாண்ட திருவிழாவாகும்.நாள்தோறும் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். பிப்ரவரி 26ம் தேதி வரை கும்பமேளா நடைபெறுகின்றது. பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.