தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர். ANI
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயில் வரை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு காரிலிருந்து நின்றபடி கையசைத்தவாறு சென்ற பிரதமர் மோடி.காரில் நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வரும் பிரதமர் மோடி.பல கிலோமீட்டர் தூரம் வரை கையசைத்து பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி.வழிநெடுக பொதுமக்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.மேடையில் ராஜராஜ சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி.தமிழகத்தில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமாக சிலை அமைக்கப்படும் என்றார் பிரதமர் மோடி.