ஆமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎஃப் படையினர். -
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் சிஆர்பிஎஃப் படையினர்.விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 2 பைலட் உள்பட, 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலெயே விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து நொறுங்கியது.ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து சம்பவ இடத்தில் தீயணைப்பு குழுவினர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் ஏஐ 171, கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த பகுதியில், தீயயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர்.ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து கவலையில் உறவினர்கள்.ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் எழும் கரும்புகை.