பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, குறிப்பாக 'ஆபரேஷன் அப்யாஸ்' என்று அழைக்கப்படும் இந்த ஒத்திகை பயிற்சி கோவாவில் நடைபெற்றது. -
திருவனந்தபுரத்தில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள்.கொச்சியில் தற்காப்பு சேவைகள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற ஒத்திகை பயிற்சியின் ஒரு பகுதியினர்.தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையின் போது விமான மீட்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒருவரை ஒருவர் மீட்டனர்.ராஞ்சியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.பாட்னாவில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்ட என்.சி.சி கேடட்கள்.கொச்சியில் நடைபெற்ற ஒத்திகை பயிற்சியின் போது, சைரன் ஒலியை எழுப்புவது, பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து செய்து காட்டிய தன்னார்வலர்கள். ஜபல்பூரில் நாடு தழுவிய சிவி பாதுகாப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள்.ராஞ்சியில் நடைபெற்ற நாடு தழுவிய சிவில் பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்.குருகிராமில் நாடு தழுவிய பாதுகாப்பு பயிற்சியான 'ஆபரேஷன் அபியாஸ்' இன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள்.தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்ற தில்லி குடிமைத் தற்காப்பு வீரர்கள். தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட காவல்துறையினர்.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் 'ஆபரேஷன் அபியாஸ்' என்ற மெகா பாதுகாப்பு ஒத்திகை ஈடுபட்ட மீட்புப் பணியாளர்கள். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையின் ஈடுபட்ட விமான மற்றும் தீயணைப்பு வீரர்கள்.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்ற தில்லி போலீஸ் ஸ்வாட் கமாண்டோஸ்.