சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். ANI
பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி முழுவதுமாக சரக்கு ரயில் மீது ஏறி விபத்து ஏற்பட்டது.விபத்து குறித்து தகவல் அறிந்த பிறகு, மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.விபத்து நடைபெற்றதால், அந்த வழியில் ஓடக் கூடிய பல ரயில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சில ரயில்கள் மாற்று பாதையில் திரும்பி விடப்பட்டுள்ளன.விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.விபத்து நடந்த பகுதிக்கு மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, ரயில் பெட்டிக்குள்ளேயே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.பாதையை சீர் செய்யும் பணியில் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்ற நிலையில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.