இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் உள்ள அவரது இல்லம் அருகே ஏராளமானோர் திரண்டு போராடி வருகின்றனர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைய முற்பட்ட போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியும், புகை குண்டுகளை வீசியும் விரட்டியடிக்கும் பாதுகாப்பு படையினர்.மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது.போராட்டக்காரர்கள் மீது புகைக் குண்டுகளை வீசி விரட்டியடிக்கும் பாதுகாப்பு படையினர்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது.பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக வெடித்த மக்கள் போராட்டத்தின் விளைவாக, பிரதமராக பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச கடந்த மே மாதம் பதவி விலகினார்.தலைநகர் கொழும்புவில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.