ஓ. பன்னீர்செலம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்தும், ஆக்ரோஷமாக கதவை உடைதும் உள்ளே நுழைய முயற்சித்தனர்.
கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள்.ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.கற்கள், கட்டைகளை கொண்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட அதிமுகவினர்.போர் களம்போல நிலவி வரும் அதிமுக தலைமை அலுவலகம்.அடித்து நொறுக்கப்பட்ட பஸ் அருகில் நிற்கும் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டதால் அதிமுக தலைமை அலுவலக பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.அதிமுக தலைமை அலுவலகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர்.