பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், கோவையில் பிரதமர் மோடியின் பிரமாண்ட வாகன அணிவகுப்பு.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் தொடங்கும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது.வழிநெடுக பாஜக கொடிக்கம்பங்கள், பதாகைகளை வைத்து மோடியை வரவேற்ற பாஜவினர்.இரண்டரை கி.மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடியே மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.பிரதமர் மோடியை வரவேற்க குவிந்த தொண்டர்கள்.நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சாலையின் இருபுறங்களிலும் நடத்தப்பட்டன.சாலையின் இருபுறங்களிலும் குவிந்துள்ள பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் பிரதமருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.