நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளரான லோவல் தவானுக்கும் ரிஷிகேஷில் உள்ள சிவபுரியில் கங்கை நதி கரையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியனின் திருமணம் எளிமையாக நடைபெற்றது.தமிழில் டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.ஆண் தேவதை, ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது பெரிய அளவில் பிரபலம் அடைந்த ரம்யா பாண்டியன்.பிக்பாஸ் பிரபலங்கள் திருமணம் செய்து வருகிறார்கள் அந்த வரிசையில் ரம்யா பாண்டியனும் இடம் பிடித்திருக்கிறார்.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி ரம்யா பாண்டியன்.திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன்.மாடலிங் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ரம்யா, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய குடும்பத்துடன் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளரான லோவல் தவான் உடன் அருண் பாண்டியன். மணமக்களுடன் ரம்யாவின் சித்தப்பா அருண் பாண்டியன், அம்மா சாந்தி துரைப்பாண்டி, தாய் மாமா கணேஷ் குமார், உறவினர்கள் கலந்துகொண்டனர்.ரம்யா பாண்டியன் - லோவல் தவான் ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.