விளையாட்டு

ஐபிஎல் ஆட்டத்தில் நடுவரிடம் தோனி வாக்குவாதம்

ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது சென்னை. முதலில் ஆடிய ராஜஸ்தான் 151/7 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 155/6 ரன்களை எடுத்து வென்றது. இந்நிலையில் ஆட்டத்தில் கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் பந்து வீசிய போது நோபால் வீசியதாக சர்ச்சை எழுந்தது. கடைசி ஓவரின் நான்காவது பந்தை கள நடுவர் நோ பால் என சைகையால் தெரிவித்தார். ஆனால் ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் அல்ல என மறுத்தார். இதனால் நோ பால் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதைக் கண்டு ஆவேசமான சென்னை கேப்டன் தோனி மைதானத்தின் உள்ளே சென்று நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். எந்தச் சூழலிலும் நிதானமாக இருக்கும் தோனி, ஆடுகளத்துக்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது ஆச்சரியம் ஏற்படுத்தியது. படங்கள் நன்றி: ஐபிஎல்டி20.காம்

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

SCROLL FOR NEXT