உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா - புகைப்படங்கள்

உலக கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதியதில் இந்தியா அபார வெற்றி.

DIN
இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
இலங்கை அணி 55 ரன்னில் ஆல் அவுட்.
உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களில் முகமது சமி முதல் இடத்தை பிடித்து சாதனை.
அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் ஜாகீர் கான் மற்றும் ஸ்ரீநாத் சாதனையை முகமது சமி சமன் செய்தார்.
முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்தனர்.
சிறப்பாக பந்து வீசிய தில்ஷான் மதுஷங்கா ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிறப்பாக பந்து வீசிய தில்ஷான் மதுஷங்கா ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதும் நிசாங்காவை பும்ரா எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றினார்.
கருணாரத்னேவை சிராஜ் எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார்.
சமர விக்ரமா ஷ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கேப்டன் குசால் மெண்டிசை அவுட் ஆக்கினார் சிராஜ்.
அசலங்கா, துஷான் ஹேமந்தா, துஷ்மந்தா சமீரா ஆகியோரை முகமது ஷமி வெளியேற்றினார்.
இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்தியாவின் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சக வீரர்களுடன் கொண்டாடினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதிய போட்டியின் போது ரசிகர்கள்.
302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT