சென்னை ஜன. 3 - வைகை - பெரியாறு கால்வாய்களை சீரமைத்து நவீனமாக்கும் திட்டத்துக்கு முழு நிதி உதவி அளிக்க கொள்கையளவில் உலக பாங்கு சம்மதித்துள்ளது. இத்தகவலை பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ப. உ. சண்முகம் இன்று நிருபரிடம் தெரிவித்தார்.
உலக பாங்கு நிபுணர்கள் தமிழ்நாட்டுக்கு இருதடவை வந்து திட்டப் பிரதேசத்தை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். முடிவான பரிசீலனைக்கென அவர்கள் மீண்டும் வரலாம். இதற்கிடையில் அவர்கள் கோரிய சில தகவல்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் மேலும் கூறினார்.
உலக பாங்கின் இறுதி அங்கீகாரம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை தயாரித்த தமிழ்நாடு அரசு இதற்கு ரூ. 14.5 கோடி செலவாகுமென மதிப்பிட்டுள்ளது. இவ்வேலை 1976 - 77ல் துவங்கப்படலாம்; அதிலிருந்து மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படலாம்.
தற்போதுள்ள ஆயக்கட்டு 1.4 லட்சம் ஏக்கர்கள். மேலும் 46000 ஏக்கர்கள் இத்திட்ட பாசனவசதி பெறும்.
வைகையிலிருந்து 32 கிலோ மீட்டர் இணைப்பு கால்வாய் அமைப்பதும் பெரியாறு 4 முக்கிய கால்வாய்களுக்கு சிமெண்டு பூசுவதும் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.