காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி ஆகிய அறிகுறிகளைக் கொண்ட "ஸ்வைன் ஃப்ளூ' எனப்படும் பன்றிக் காய்ச்சல் கடந்த இரண்டு மாதங்களாக உலகையே மிரட்டி வருகிறது.
இந்தக் காய்ச்சலின் தாக்கத்தை மதிப்பிட்டு "உலக கொள்ளை நோய்' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்து, அனைத்து நாடுகளையும் உஷார்படுத்தியுள்ளது.
ஏனெனில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா என 76 நாடுகளில் வெகு வேகமாக பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதை உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் காரணமாக அந்தந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் வைரஸýக்கும் பன்றிக்கும் உள்ள தொடர்பு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன, பன்றி இறைச்சி சாப்பிடலாமா, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது ஏன் என்பது குறித்து விரிவான கேள்வி - பதில்:-
பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் பெயர் என்ன?
"இன்ஃபுளூயன்ஸô ஏ எச்1என்1' வைரஸ்தான் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதுதான் முதலில் "ஸ்வைன் ஃப்ளூ' என்று அழைக்கப்பட்டது.
இந்த வைரஸ் முதன்முதலில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏப்ரலில் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இந்தியா உள்பட 76 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள பன்றிகளில் காணப்படும் வைரûஸ, இந்த வைரஸ் ஒத்திருப்பதால் முதலில் "ஸ்வைன் ஃப்ளூ' என அழைக்கப்பட்டது.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன?
சாதாரண சீசன் ஃப்ளூவைப் போன்று காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கும் ஏற்படலாம் என்கிறது மருத்துவ உலகம்.
பன்றிக் காய்ச்சல் பரவுவது எப்படி?
பன்றிக் காய்ச்சலின் "ஏ எச்1என்1' வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸôல் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர், இருமும்போது அல்லது தும்மும்போது தெறிக்கும் எச்சில் மற்றும் சளி மூலம் மற்றொருவருக்கு வைரஸ் பரவி பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த சிகிச்சை என்ன?
இந்தக் காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் என்பதால், இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நோயைக் கட்டுப்படுத்த "டாமிஃப்ளூ' மாத்திரைகள் அளிக்கப்படும். டாக்டரின் பரிந்துரையின்றி இந்த மாத்திரையைச் சாப்பிடக் கூடாது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் தட்டுப்பாடு இல்லை.
எனினும் உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதால், "டாமிஃப்ளூ' மாத்திரைகளை இறக்குமதி செய்யவும் முடிவு செய்து, சுங்க வரி விலக்கை மத்திய அரசு அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.