பன்றி இறைச்சிக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்று பன்றி இறைச்சியை நன்றாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
சாதாரண நோய் காரணமாக பன்றிகள் இறந்தால் பயப்படத் தேவையில்லை. மேலும் பயத்தில் பன்றிகளைக் கொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது?
இந்தியாவில் தில்லி, ஹைதராபாத், ஜலந்தர், பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பன்றிக் காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அமெரிக்காவிலிருந்து வந்த 15 பேருக்கு தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவையில் மட்டும் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. சிகிச்சைக்குப் பிறகு இருவரும் நலமாக உள்ளனர். சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
ஜே. ரங்கராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.