மருத்துவம்

கை - காலில் வலி ஏற்பட்டாலே வாயு பிரச்னையா?

கை - கால் உள்பட உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும், அதற்குக் காரணம் வயிற்றுக்குள் இருக்கும் வாயுதான் காரணம் என்பது பொதுவான கருத்து. குறிப்பாக "கேஸ்' அங்கும், இங்கும் ஓடுகிறது எனப் பல நோயாளிகள் சொல்

தினமணி

கை - கால் உள்பட உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும், அதற்குக் காரணம் வயிற்றுக்குள் இருக்கும் வாயுதான் காரணம் என்பது பொதுவான கருத்து. குறிப்பாக "கேஸ்' அங்கும், இங்கும் ஓடுகிறது எனப் பல நோயாளிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். வாயின் வழியாக இரைப்பை மற்றும் சிறு குடலுக்கு வரும் காற்று வெளியேறும் ஓரே வழி ஆசனவாய்தான் என்பது உண்மை.

  குடலுக்குள் இருக்கும் காற்று எந்தக் காரணத்தைக் கொண்டும் உடலின் மற்ற பகுதிகளுக்கோ அல்லது வேறு உறுப்புகளுக்கோ போக முடியாது.

  பொதுவாக நாம் உணவு சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் உள்ளே செல்கிறது. மேலும் சில உணவுப் பழக்கவழக்கங்களாலும், வயிற்றுக்குள் காற்று உருவாகலாம். குறிப்பாக உருளைக் கிழங்கு, கடலை, சுண்டல் போன்ற உணவு வகைகளால்கூட சிலருக்கு வழக்கத்தைவிட அதிக வாயு உருவாகலாம். இதனால் வயிற்று உப்புசம் ஏற்படலாம். அத்துடன் வயிற்று வலி, ஆசன வாய் வழியாக அதிகமாக காற்று வெளியாகலாம். இனம் தெரியாத ஒரு அசெüகரியம் வரலாம்.

  எனவே குறிப்பிட்ட உணவு வகைகளால் இந்த மாதிரி பிரச்னைகள் வந்தால், அந்த குறிப்பிட்ட உணவுப் பொருள்களை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இந்தப் பிரச்னையை மாத்திரைகளால் முழுவதும் சரிப்படுத்த முடியாது.

  அத்துடன் உடலின் மற்ற பாகங்களில் குறிப்பாக கை மற்றும் கால்களில் ஏற்படும் வலிக்கு வாயு பிரச்னை எனக் கருதி, சுய மருத்துவம் செய்து உடல் நலனை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

மேலும் விவரங்களுக்கு...

டாக்டர் பி. சதீஷ்,

இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை

மற்றும் லாப்ராஸ்கோப்பி சிகிச்சை நிபுணர்,

லோட்டஸ் சூர்யா லாப்ராஸ்கோப்பி

அறுவை சிகிச்சை மையம்,

சாலிக்கிராமம், சென்னை.

செல்: 98400 - 53727.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT