மருத்துவம்

புதுக்கோட்டையில் இலவச உடல் இயக்க மருத்துவ முகாம்

ஆலங்குடியில் மாற்றுத்திறன் தொண்டு நிறுவனம் மற்றும் அஞ்சலி கதிரவன் பிசியோதெரபி மருத்துவ மையம் இணைந்து நடத்திய இலவச உடல் இயக்க மருத்துவ முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஜெயச்சந்திரன் சோமன்

ஆலங்குடியில் மாற்றுத்திறன் தொண்டு நிறுவனம் மற்றும் அஞ்சலி கதிரவன் பிசியோதெரபி மருத்துவ மையம் இணைந்து நடத்திய இலவச உடல் இயக்க மருத்துவ முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொழில்நுட்ப வல்லுநர் ஜி.;வசந்தராம்குமார் தலைமை தாங்கி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

புதுக்கோட்டை  அரசு மருத்துவமனை மருத்துவர் கே.இளையராஜா,ஆசிரியர் எஸ்.ஸ்டீபன், ஆரோக்கியசாமி ஆகியோர் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு நடை பயிற்சி கருவிகள். தசைப்பயிற்சி கருவிகள், பக்கவாத நோயாளிகளுக்கு தசைத்தளர்வு பயிற்சி கருவிகளும் வழங்கினார்கள். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட குழந்தைகள், முதியோர்களுக்கு உடல் இயக்க மருத்துவர் கே. கோவிந்தசாமியும், மனம் நலம் குறித்த ஆலோசனைகளை ஹோமியோபதி மருத்துவர் வி.ஜெகதாவும் வழங்கினார்கள்.  இறுதியாக ஓய்வுபெற்ற நல்லாசிரியர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தொடா் விடுமுறை: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT