செய்திகள்

இப்படித் தூங்காதீங்க!

தினமணி

உறக்கத்துக்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்கிறது சமீபத்திய வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச்னைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது. தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

தூங்கும் நிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் உள்ளது என நம்மில் பலருக்கும் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் நாம் அதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. ஆனால், தூங்கும் நிலைக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது.

தினமும் சரியான நேரத்துக்கு தூங்குவது மிகவும் முக்கியம். இரவில் தான் உறங்க வேண்டும். எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இர வு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும். தினமும் குறைந்தது 6 மணி முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.

உழைத்துக் களைத்து தரையில் படுத்தால் கூட நன்றாக உறக்கம் வரும் தான். ஆனால் வெறும் தரையில் படுக்கக் கூடாது. பாய் அல்லது ஏதாவது ஒரு மெல்லிய விரிப்பையாவது பயன்படுத்தவேண்டும். மெத்தையில் தூங்கும் பழக்கம் உடையார்கள் மென்மையான இலவம் பஞ்சு மெத்தைகளை பயன்படுத்தவேண்டும். மற்றவை உடல் சூட்டினை அதிகரித்துவிடும்.

கிழக்கு திசையில் தலை வைத்துப் படுப்பது தான் சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்பது மருத்துவர்கள் சொ ல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.

பொதுவாக நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இடது பக்கமாக திரும்பி படுப்பதால் எண்ணற்ற நன்மைகளைப் பெற முடியுமாம். எனவே தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும் வழக்கத்தைக் கொள்ளுங்கள். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது கா லை நீட்டி இடது கால் மேல் வைத்து,  வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.

இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்புக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.

தலைகுப்புற கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் நாம் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT