முகப்பு
செய்திகள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு அழகியல் மருத்துவமனை!

இஸ்மோ [Ismo] தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை' சென்னை ஆழவார்பேட்டையில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

'இஸ்மோ [Ismo] தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை' சென்னை ஆழவார்பேட்டையில் பல பிரபலங்கள் மத்தியில் துவங்கப்பட்டது. இந்த அழகியல் [Aesthetic] மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளுடனும் மருத்துவர்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் பல சாதனைகளை செய்த மனோஜ் நைனார் அவர்களே இந்த 'இஸ்மோ 'விற்கு நிறுவனர். 'பாலிவுட்டின் அழகியல் டாக்டர்' என அழைக்கப்படும் உலகப் புகழ் அழகியல் மருத்துவர் ராஷ்மி ஷெட்டி 'இஸ்மோ'வுடன் இணைந்து செயல்பட உள்ளார் .

காஸ்மெடிக்ஸ் மருத்துவத்தில் 15 வருட அனுபவம் கொண்டவர்  ராஷ்மி ஷெட்டி. இவர் உலகப் புகழ் பெற்ற  பிரபலங்களின் அழகியல் மருத்துவராக மட்டுமில்லாமல் ,இந்த துறையின் முன்னோடியாகவும், அழகியல் புத்தகங்களுக்கு ஆசிரியராகவும், அழகியல் மருந்துகளின் நிபுணராகவும் திகழ்கிறார்.  பல ஆயிரம் முகங்களை அழகுப் படுத்தி, அவர்களின் மறைந்துள்ள முழு  இயற்கை அழகை வெளி கொண்டு வந்துள்ளார் ராஷ்மி ஷெட்டி. நடிகர்கள் கார்த்தி, ஜி வி பிரகாஷ், S J சூர்யா, பரத், நடிகைகள் ஐஸ்வர்யா மேனன், ரூபா மஞ்சரி, சம்யுக்தா, மித்ரா மிதுன், சஞ்சனா சிங்க் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஜோதி கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

முழு கட்டுரையைப் படிக்க →