செய்திகள்

வாய்க்கு வெளியே வரும் கட்டி: அரசு மருத்துவமனையில் அரிய அறுவைச் சிகிச்சை

தினமணி

நாக்கைப் போல் வாய்க்கு வெளியே வந்த கட்டியை அகற்றும் அரிய அறுவைச் சிகிச்சை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த 59 வயது பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளாக உணவு உட்கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனால், மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது, உணவுக்குழாயில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை. அவர் இருமும்போது, வாய்க்கு வெளியே நாக்கு போன்ற நீளமான சதை ஒன்று வெளியே வந்து செல்வதைப் பார்த்து அதிர்ச்சி
யடைந்தார்.
இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மார்ச் 1-ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். உணவுக்குழாய்க்குள் விடியோ என்டோஸ்கோப்பி கருவியைச் செலுத்திப் பார்த்தபோது, கட்டி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக காது - மூக்கு - தொண்டை துறையின் இயக்குநர் டாக்டர் எம்.கே.ராஜசேகர், இரைப்பை குரல் அறுவைச் சிகிச்சைத் துறையின் இயக்குநர் டாக்டர் ஓ.எல்.நாகநாத் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்த அறுவைச் சிகிச்சையின் போது ரத்தக் கசிவு ஏற்பட்டால், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே ரத்தக்கசிவு ஏற்படாமல் வாய் வழியாகவே கருவியைச் செலுத்தி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. நோயாளி இருமி, கட்டி வெளியே வந்த சமயத்தில் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
என்டோஸ்கோப்பி கருவியின் உதவியுடன் நவீன உபகரணத்தைப் பயன்படுத்தி சுமார் 2 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ரத்தக் கசிவு இல்லாமல் 15 செ.மீ. நீளமுள்ள கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது என்றனர்.
இதற்கு முன் ஆந்திரத்தில் இதே வகையான 4 செ.மீ. அளவுள்ள கட்டி, ஸ்பெயின் நாட்டில் 5 செ.மீ. அளவுள்ள கட்டி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 15 செ.மீ. நீளமுள்ள கட்டி அறுவைச் சிகிச்சை செய்யப்படுவது உலக அளவில் இதுவே முதன்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT