செய்திகள்

சிறுநீரகத்தை சுத்தமாக்க என்ன செய்யலாம்?

தினமணி

நமது உடலில் சிறுநீரகம் மிக மிக முக்கியமான உறுப்பாகும்.  சிறுநீரகத்தில் தேவையற்ற நச்சுக்கள் சேர்ந்துவிட்டால் பலவிதமான பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். சிறுநீரகத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தினமும் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும்.

கேரட் ஜூஸ், புதினா, தக்காளி மற்றும் செர்ரி பழச்சாறுகள், ஸ்மூதிக்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் அன்றாட உணவில் குதிரைவாலியைச் சேர்த்து வந்தால் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படாமல் தற்காப்பாகச் செயல்படும். 

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் அடிக்கடி சாப்பிட்டு வர சிறுநீரகக் கல் ஏற்படாது.

கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் போன்ற மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.  

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய புரோட்டின் தேவை. ஆனால் சிக்கன், மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தவிர, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்ஷியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலத்தை உருவாக்கும் உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT