செய்திகள்

மூக்கடைப்பு, கீழ் உதடு வீக்கம் மற்றும் சுவை இழந்த நாக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு இதுதான்!

கோவை பாலா

அறிகுறிகள் : உடல் பயன்பாட்டிற்கு வராத கொழுப்பு உடலில் இருந்தால், அந்த இடத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளும். இதனால் உள்வாங்குதல், வெளியேறுதல் தடைபடும். இதற்கு அடைப்பு என்று பொருள். இதனால் உண்டாகக் கூடிய மூக்கடைப்பு, கீழ் உதடு வீக்கம் மற்றும் சுவை இழந்த நாக்கு இந்த குறைபாடுகள் நீங்க..

மண்டலம் - தோல் மண்டலம்
காய் - கோவக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - புரட்டாசி
குணம் - தூய்மை
ராசி / லக்கினம் - கன்னி

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு : கோவைக்காய் (5), கொப்பரைத் தேங்காய் (50 கிராம்), கொத்தவரங்காய் (5), இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி  காலை மற்றும் மாலை என இருவேளையும் குடிக்கலாம். கோவைக்காய் மற்றும் கொத்தவரங்காயை நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக  எடுத்துக்கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT