செய்திகள்

இரவு தூக்கம் நன்றாக வர

கோவை பாலா

சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தீர்வு : புடலங்காய் (150 கிராம் தோல், விதையுடன்), வெண்பூசணி விதை (5 கிராம்), ஆளி விதை (2 கிராம்), புதினா (சிறிதளவு), வெற்றிலை (1) இவை அனைத்தையும்  மிக்ஸியில் போட்டு  தண்ணீர்  அல்லது மோர் ஊற்றி அரைத்து  ஜூஸாக்கி  இரவு வேளை  உணவாக எடுத்துக் கொள்ளவும். பின்பு  பசி எடுத்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம்.

வெண்தாமரையுடன் மஞ்சள்தூள் (சிறிதளவு) சேர்த்து கஷாயம் வைத்து இரவு படுக்கும் பொழுது குடித்து வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

சீமை அமுக்கரா வேர் நன்கு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். தினந்தோறும் (5 கிராம்) வீதம் இரவில் உணவிற்குப் பிறகு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT