செய்திகள்

ஆஸ்துமா பிரச்னையா? குணமாக்கும் கஷாயம் இது!

முதலில்  துளசி, சுக்கு , மிளகு , ஏலக்காய்,  மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கோவை பாலா

துளசி மல்லி கஷாயம்

தேவையான பொருட்கள்

பச்சைத் துளசி - 100 கிராம் 
சுக்கு - 20 கிராம் 
மிளகு - அரை ஸ்பூன்
ஏலக்காய் - 5 
தனியா (மல்லி விதை) - 20 கிராம் 
பனை வெல்லம் - தேவையான அளவு

செய்முறை : முதலில்  துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து  அருந்த வேண்டும்.

பயன்கள் : இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு ஆஸ்துமா மற்றம் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபட்டு முழு ஆரோக்கியம் பெறலாம்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: அக்.16 முதல் 20,378 பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

வள்ளலாா் அவதார தினம்: ஏழைகளுக்கு நல உதவிகள் அளிப்பு

தடுப்புக் காவலில் ரௌடி கைது

மெரீனா கடற்கரையில் எண்ணெய் கசிவு தடுப்பு ஒத்திகை

SCROLL FOR NEXT