உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (03.01.2017) வாழை

வாழைத்தண்டு, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து வாரம் மூன்று முறை சாப்பிட்டு

தினமணி

வாழைத்தண்டு, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் சீறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.

வாழைப்பூவை  இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தக் கடுப்பு நீங்கும். வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தீரும்.

வாழைத்தண்டு சாறு, பூசணிக்காய் சாறு, அருகம்புல்ச் சாறு இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகு பெறும்.

பிஞ்சு வாழைக்காயை உலர்த்தி பொடி செய்து,  அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.

வாழைத்தண்டு சாறு எடுத்து மண் சட்டியில் ஊற்றி சுடவைத்துக் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

வாழைக்காயை இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை தீரும்.

வாழைத்தண்டு சாறு எடுத்து தினமும் 4 அல்லது 5டம்ளர் வீதம் மூன்று நாள்கள் குடித்து வந்தால் கல் அடைப்பு நீங்கும்.


கோவை . பாலா சுப்பையா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 8.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT