உணவே மருந்து

இந்த அறிகுறிகளுக்கு சரியாக தண்ணீர் குடிக்காததுதான் காரணம்!

தினமணி

நமது உடல் நான்கில் மூன்று பங்கு நீரால் ஆனது, அதே வேளையில் மற்ற உணவுகளை விட நீரின் தேவையும் உடலிற்கு அதிகம் உண்டு. வெயிலின் ஆதிக்கம் அதிகமுள்ள நமது நாட்டில் வியர்வையின் மூலம் நீர் மட்டுமின்றி உடலின் ஸ்திர தன்மைக்கு தேவையான குளுக்கோஸ் ஆகிய சத்துகளும் வெளியேறி விடுகின்றன. 

நாளொன்றிற்கு 7 முதல் 8 லிட்டர் வரை நாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவியல் சொல்கிறது. அதன் அடிப்படையில் தேவையான அளவு நீரை நாம் குடிப்பதில்லை என்பதற்கான எட்டு அறிகுறிகள் இவை;

1. வறண்டச் சருமம்:

தோல் வறண்டு போவதற்கான காரணம் சரியான நீரோட்டம் இல்லாததுதான். நமது உடலுக்குத் தேவையில்லாத வாயு மற்றும் கழிவுகளை சருமம் வியர்வை மூலமாகவும், வெப்பம் மூலமாகவும் வெளியேற்றும். நீரின் அளவு குறைவாக இருந்தால் கழிவுகள் வெளியேற வழியின்றி உடலிலேயே தங்கி விடுகின்றன, இதன் காரணமாகவே முகப்பருக்கள் பொன்றவை ஏற்படும்.

2. வறண்ட உதடுகள்:

உலர்ந்து காய்ந்த உதடுகள் நாம் சரியாக நீர் குடிப்பதில்லை என்பதை உடனே காட்டும் கண்ணாடி ஆகும். சோடா அல்லது பழச்சாறு குடிப்பது சில மணி நேரங்களுக்கு விடிவைக் கொடுத்தாலும், உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடிப்பதே இந்த பிரச்னையில் இருந்து உங்களை விடுவிக்கும். 

3. தீராத தாகம்:

குடிப் பழக்கம் உள்ளவர்கள் பலரும் இந்த தீராத தாகத்தால் அவதிப் படுவார்கள். மதுபானங்கள் உடலில் உள்ள நீரின் அளவைக் குறைத்துவிடும், அதனால் மது அருந்துவது போன்ற பழக்கம் உள்ளவர்கள் நிறையத் தண்ணீர் குடிப்பது அவர்களது உடல் நலத்தைச் சீர் செய்யும்.

4. தசைகள் நீர்த்துப்போகும்:

நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது விளையாடும்போதோ முழுமையாக உங்கள் உடலில் நீரின் அளவு சீரக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் நீங்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்றவாறு தண்ணீரை நீங்கள் குடிப்பதில்லை என்று அர்த்தம். நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டின் அளவு சமநிலையில் இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் உங்களது ஆற்றலை நீங்கள் இழப்பீர்கள். 

5. எலும்பு பிணைப்புகளில் வலி:

தாராளமாக நீர் குடிப்பது எலும்பு பிணைப்புகளின் இடையில் தேங்கியுள்ள தேவையில்லாத பொருட்களை விலகிச் செல்ல செய்து பிணைப்புகளை பராமரிக்கும். உங்கள் ரத்த ஓட்டத்திற்கும், எலும்புகளுக்கும் இடையே ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் பரிமாற்றத்திற்கு உதவும். உங்களுக்கு அடிக்கடி கை, கால் மூட்டுகளில் வலி வருகிறது என்றால் உங்கள் உடல் உங்களிடம் தண்ணீர் பற்றாக்குறையைக் கூறுகிறது என்று பொருள். 

6. எப்போதும் சோர்வாக இருப்பது:

பல அத்தியாவசிய திரவங்கள் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு நமது உடலில் இருக்கும் நீர் சக்தி மிகவும் அவசியம். அதன் அடிப்படையில் நீரின் அளவு குறைவாக இருந்தால், ரத்தத்தை நமது உடல் முழுவதும் பாயச்செய்ய அதிகமான சக்தியை நமது உடல் உபயோகிப்பதால் சீக்கிரமாக சோர்வடைந்துவிடுவீர்கள்.

7. அடிக்கடி நோய்வாய்ப்படுவது:

உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீர் நீக்குவதன் வாயிலாகவே நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த நச்சுகள் உடலிலேயே தேங்குவதன் மூலம் நாம் அடிக்கடி நோய் வாய்ப்பட்டுத் துன்பப்பட நேரிடும்.

8. சாப்பிட்ட பிறகும் பசி:

உடலுக்குத் தேவையான நீர் தேவை பூர்த்தி ஆகாத போது உடல் பசி உணர்வைத் தூண்டி விடும், அதை அறியாமல் நாம் பசியை பூர்த்தி செய்ய உணவு போன்ற திட பொருட்களை உண்பது, பசியை எப்பொழுதும் தீர்க்காது.

இவ்வாறு செரிமானம், சரும ஆரோக்கியம், உடல் எடையைச் சீராக பராமரிப்பது போன்ற பல நன்மைகளைத் தருவதோடு, நம்மை அபாயகரமான பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT