உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை ஆமணக்கு

தினமணி

மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெய்யை தினமும் ஆசனவாயில் தடவி வந்தால் மலம் எளிதில் வெளியாகும்.

ஆமணக்கு எண்ணெய்யை தினமும் ஐந்து சொட்டுகள் சாப்பிட்டு வந்தால் குடல் புண், குடல் ஏற்றம், காது, மூக்கு, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

ஆமணக்கு விதைப் பருப்பை ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு துணியில் சுற்றி சட்டியில் போட்டுச் சூடாக்கி ஒத்தடம் கொடுத்தால் வயிற்று வலி, கல்அடைப்பு, சதை அடைப்பு, நீர் அடைப்பு, வீக்கம் போன்றவை குணமாகும்.

ஆமணக்கு இலை, துத்தி இலை, முல்தானி மட்டி இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, வாழைப் பூ சாற்றில் குழைத்து வயிற்றுப் பகுதியில் பற்றுப் போட்டால் தளர்ந்த வயிறு இறுகும்.

ஆமணக்கு எண்ணெய்யுடன் (அரை லிட்டர்), கடுக்காய் (50 கிராம்) சேர்த்துக் காய்ச்சி, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் மூல நோய்கள் அனைத்தும் தீரும்.

ஆமணக்கு இலையை வதக்கி கட்டினால் கை, கால்களில் உண்டாகும் வீக்கம் தணியும்.

ஆமணக்கு இலையை வதக்கி மார்பகங்களில் வைத்துக் கட்டினால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT