உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: வாடா மல்லி

DIN

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

வாடா மல்லி:

  • கண் அரிப்பு , சிகப்பு தன்மை மாற வாடாமல்லி பூக்கள், இலைகளை தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து  அந்த நீரில் கண்களை கழுவி வந்தால்  கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும்.
  • சேற்றுப் புண் குணமாக வாடாமல்லி இலை, பூக்களை சிறிதளவு எடுத்து  நீர்விடாமல் நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு  அவற்றை விளக்கெண்ணெய் (250 மில்லி)  அளவு கலந்து இதனுடன்   சிறிதளவு மஞ்சள் பொடி சேர்க்கவும்.  பின்பு தைலபதத்திற்கு காய்ச்சி வைத்துக்கொண்டு  பயன்படுத்தி வந்தால் சேற்றுபுண்கள் குணமாகும்.
  • உயர் இரத்த அழுத்தம் குறைய வாடாமல்லி பூக்களை (10) எடுத்து தண்ணீர் (1லிட்டர்) சேர்த்து காய்ச்சி அதனுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்த நிலை மாறும்.  மேலும் பித்தப்பையில் ஏற்படும் கற்களை கரைக்கும்.
  • தோலின் சுருக்கம், கருமை மறைய வாடாமல்லி பூ மற்றும் இலைகளைஅரைத்து அதன் பேஸ்ட்டை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கப்பில்  சிறிதளவு தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தேவையான அளவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை உடலின் மேற்பூச்சாக பயன்படுத்தும் போது தோலின் மிருது தன்மையை பாதுகாக்கிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்கள், உலர் தன்மை ஆகியவற்றை போக்கக் கூடியதாக இது விளங்குகிறது. தோலில் ஏற்படும் வயோதிகம் போன்ற தன்மை மற்றும் தோலின் கருமை நிறம் மாற்றம் அடையும்.
  • ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு வாடாமல்லி இதழ்களை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி அதனுடன்     சுக்கு பொடி(2சிட்டிகை) மிளகு பொடி(2சிட்டிகை) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இவற்றை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சூடாக இருக்கும் போதே பருகுவதன் மூலம் ஆஸ்துமாவால் ஏற்படும் தொல்லையை முழுவதும் தணிக்கிறது. மேலும் இந்த தேனீரை முறையாக குடித்து வருவதன் மூலம் சளியை கரைத்து கட்டுப்படுத்துகிறது. இருமலை போக்குகிறது.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT