உணவே மருந்து

இந்தக் காயை உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்!

கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

தினமணி

கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.  நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கோவைக்காய் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.  நீரிழிவு   நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

கோவைக்காய் இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.

கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு, ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்னைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT