உணவே மருந்து

தாங்க முடியாத கழுத்து வலியா? இதோ தீர்வு!

கோவை பாலா

மண்டலம் - ரத்த ஒட்ட மண்டலம்

காய் - வாழைக்காய்

பஞ்சபூதம் - நீர்

மாதம் - பங்குனி

குணம் - நற்குணங்கள் கிரகிப்பு

ராசி /லக்கினம் -  மீனம்

சத்துக்கள் : சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ, பி6, சி, இ, கே)

தீர்வு : தினந்தோறும் வாழைக்காய் (சிறியது 1) எடுத்து நன்றாக கழுவி மேல் தோலை மெலிதாக சீவி பொடியாக நறுக்கி 5 நிமிடம் வெதுவெதப்பான நீரில் போட்டு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு எலுமிச்சம் பழம் சாறு (1), மிளகுத் தூள் சிறிதளவு, இந்துப்பு சேர்த்து நன்றாக கலக்கி  வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வரவும். தினமும் மதிய உணவில் வாழைப்பூ நீராவியில் வேக வைத்து பொறியலாக அதிகம் எடுத்துக் கொள்ளவும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT