உணவே மருந்து

உடல் தன்னிச்சையாக தூக்கி தூக்கிப் போடுகிறதா? கவலை வேண்டாம், தீர்வு இதுதான்!

உடம்பில்  உள்ள தேவையில்லாத கொழுப்புகள் தன்னைத் தானே தளர்த்திக் கொண்டு

கோவை பாலா

அறிகுறிகள் : உடம்பில்  உள்ள தேவையில்லாத கொழுப்புகள் தன்னைத் தானே தளர்த்திக் கொண்டு ஒரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொழுப்பை மாற்றுவதற்கு உடலே தன்னைத்தானே அசைத்துக் கொள்ளும். அப்போது ஏற்படும் கை, கால் மற்றும் உடல் தன்னிச்சையாக தூக்கிப் போடுதல் போன்ற பிரச்னை நேர்ந்தால் அதிலிருந்து விடுபட.

மண்டலம்- தோல் மண்டலம்
காய் - கோவக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - புரட்டாசி
குணம் - தூய்மை
ராசி / லக்கினம் - கன்னி

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு : இரண்டு வேளை உணவாக கோவைக்காய் (5), கொத்தவரங்காய் (5), வெற்றிலை (3)  இவை மூன்றையும் எடுத்து நன்றாக கழுவி அதனுடன் மிளகு (2), இஞ்சி (1 துண்டு), எலுமிச்சம் பழம் (அரை பழம் தோலுடன்) அனைத்தையும் நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக்கி காலை மற்றும் மாலை என இருவேளையும் குடிக்கலாம். மேலும் கோவைக்காய் மற்றும் கொத்தவரங்காயை நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து உணவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : நீங்கள் தினமும் சமைக்கும் போது காரத்திற்கு பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

SCROLL FOR NEXT