ஆண்மை பெருக வைக்கும் பால் கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்!
பொரி அரிசி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கு. இதை தினமும் சாப்பிட்டு வந்தால்
பொரி அரிசி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கு. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் வாதம், கபம் சம்பந்தமான நோய்கள், வாந்தி வருவது போன்ற பிரச்னைகள் காணாமல் போய்விடும். எந்த நோயாக இருந்தாலும் உடல் சோர்வு ஏற்படும்போது நெற்பொரி (அரிசிப் பொரி) கஞ்சி குடிக்க, நோயினால் உண்டாகிற உடற்சோர்வு மாறும். உடல் வன்மை பெருகும். அதிக தாகம் எடுப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், நாக்கு ருசியில்லாமல் போவது போன்ற பிரச்னைக்கு நெற்பொரி கஞ்சி நல்ல தீர்வு.
பால் கஞ்சி: பச்சரிசியும் பசும்பாலும் சேர்த்து காய்ச்சுவது, பால் கஞ்சி! இதைக் குடித்து வரும்போது பித்தத்தால் வரும் உடல் எரிச்சல் தீரும், ஆண்மை பெருகும்.
கொள்ளு கஞ்சி: கொள்ளும் அரிசியும் சேர்த்து காய்ச்சும் கஞ்சி! இதைக் குடிப்பதால், நல்ல பசி உண்டாகும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.