உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: பிண்ணாக்குக் கீரை

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • வெள்ளைப்படுதல் குணமாக பிண்ணாக்குக் கீரையை அரைத்து சாறு (250 மி.லி) எடுத்து அதனுடன் கடுக்காய் தோலை (5) ஊறபோட்டு பிறகு காயவைத்து எடுத்து பொடியாக்கி காலை மாலை என இருவேளையும் தலா 2 கிராம் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • உடல் பலம், நரம்புகள் வலுப்பெற பிண்ணாக்குக் கீரையை அரைத்து சாறு (250 மி.லி) எடுத்து அதனுடன் 20 கிராம் அளவு அமுக்கரா கிழங்கை ஊறவைத்து பின்பு காயவைத்துப் பொடியாக்கி காலை மாலை என இருவேளையும் தலா 2 கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் உடல் பலம் அதிகரிக்கும், உணர்வு நரம்புகளும் வலுப்பெறும்.
  • மலச்சிக்கல் குணமாக பிண்ணாக்குக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
  • பிண்ணாக்குக் கீரையுடன் நிலாவரை இலையைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால், மலம் தாராளமாகக் கழிந்து குடலில் உள்ள கிருமிகள் ஒழியும்.
  • உடல் சூடு தணிய பிண்ணாக்குக் கீரையை அரைத்து சாறு எடுத்து அதனுடன் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து ஊறவைத்து பின்பு காயவைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

KOVAI  HERBAL  CARE  VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT