உணவே மருந்து

நல்ல பசி உண்டாகவும், குடல் புண் மற்றும் பித்தம் சார்ந்த குறைபாட்டை சீர் செய்ய உதவும் துவையல்  

கோவை பாலா

வேப்பம் பூ துவையல்

தேவையான பொருட்கள்

வேப்பம் பூ - 50 கிராம்
வெல்லம் - 50 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு
பச்சரிசி - 10 கிராம்

செய்முறை : முதலில் வேப்பம்பூவை சுத்தப்படுத்தி எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும். வதக்கிய வேப்பம்பூவுடன் வறுத்த பச்சரிசி, வெல்லம், மிளகு, பூண்டு மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தத் துவையலை தினமும் காலை வேளை உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் இந்தத் துவையலை கொடுத்து வந்தால் குடல் புழுக்கள் அழியும். துவையலை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது பசி உணர்வு அதிகரிக்கும், குடல் புண் மற்றும் பித்த சார்ந்த குறைபாடுகளையும்  சீர் செய்யும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT