உணவே மருந்து

உடல் பருமன், தொண்டை அழற்சியை குணப்படுத்தும் அற்புத ஜூஸ்

முதலில் அரிந்து வைத்துள்ள பாகற்காயில் எலுமிச்சம் பழச் சாற்றை ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

கோவை பாலா

பாகற்காய் சாறு

தேவையான பொருட்கள்

பாகற்காய் அரிந்தது - 100 கிராம்
மாங்காய் துருவியது - 10 கிராம்
இஞ்சிச் சாறு - 1 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
தண்ணீர்    -  தேவையான அளவு

செய்முறை : முதலில் அரிந்து வைத்துள்ள பாகற்காயில் எலுமிச்சம் பழச் சாற்றை ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்பு ஊற வைத்த பாகற்காயுடன் அரிந்து வைத்துள்ள மாங்காய்த் துருவல் மற்றும் இஞ்சிச் சாற்றை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்து வரவும்.

பயன்கள் : இந்த ஜூஸை வாரம் மூன்று நாட்கள் குடித்து வந்தால் பல வருடங்களாக சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு சீர் செய்யும் அருமையான ஜூஸாக இருக்கும்.மேலும் இதனால் உடல் பருமன் குறையும், தொண்டையில் உண்டாகும் அழற்சியையும் நீக்கும் அற்புதமான சாறு.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT