உணவே மருந்து

நீர்ச் சுருக்கு, நீர்க் கடுப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவும் உன்னதமான கஞ்சி

முதலில் புளியங்கொட்டையை நன்கு வறுத்து தோல் நீக்கி உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கோவை பாலா

புளியங்கொட்டைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

புளியங்கொட்டை - 100 கிராம்
பச்சரிசி நொய் -  100 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் புளியங்கொட்டையை நன்கு வறுத்து தோல் நீக்கி உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி நொய்யை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து வைத்துள்ள அரிசி மற்றும் புளியங்கொட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அவற்றில்  800 மி.லி அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நொய் நன்றாக வெந்த பின் தேவையான அளவு உப்புப் போட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT