குளிர் ஜன்னி மற்றும் வலிப்பு நோயை குணப்படுத்த உதவும் கஷாயம்
இந்தக் கசாயம் ஜன்னியினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால் குளிர் நீங்கி ஜன்னி உடனடியாக நீங்கும்.
அரைக் கீரை சுக்கு கசாயம்
தேவையான பொருட்கள்
அரைக் கீரை - ஒரு கட்டு
சுக்கு. - 5 கிராம்
Advertisement
Advertisement
இஞ்சி. - 5 கிராம்
மிளகு. - 10
மஞ்சள். - சிறிதளவு
செய்முறை
- முதலில் அரைக் கீரையை அலசி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- சுக்கு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை தட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் அரைக் கீரை மற்றும் தட்டி வைத்துள்ள சுக்கு, இஞ்சி, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- நன்கு கொதித்து பாதியாக சுண்டச் செய்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் ஜன்னியினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால் குளிர் நீங்கி ஜன்னி உடனடியாக நீங்கும்.
மேலும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரைக் கீரை சுக்கு கசாயம் அற்புதமான ஆரோக்கியமான மருந்தாக செயல்படும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.