உணவே மருந்து

இரும்புச் சத்து குறைபாட்டை தீர்க்கும் ஆரோக்கிய சூப்

கோவை பாலா


கல்யாண முருங்கை சூப்

தேவையான பொருட்கள்

கல்யாண முருங்கை இலை - 100 கிராம்
மிளகு - 10  கிராம்
சீரகம் - 5 கிராம்
பூண்டு - 10 பல்
உளுந்து - 5 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 1
கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி
எண்ணெய், உப்பு, மஞ்சள் - தேவையான அளவு

செய்முறை : முதலில் கல்யாண முருங்கை இலையைச் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அவற்றில்  மிளகு , சீரகம் , ஆகியவற்றைப் பொடியாக்கிப் போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி,   வெங்காயம் சிறிது மஞ்சள் தூளைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதனுடன் கல்யாண முருங்கை இலை, கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  கொதிக்க வைத்து உப்புப் போட்டு இறக்கவும்.கல்யாண முருங்கை சூப் தயார்.

பயன்கள் : இந்தச் சூப்பை  இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற ஆரோக்கிய சூப்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT