ஆப்பிள் - வெள்ளரிக்காய் குளிர்பானம்
தேவையான பொருட்கள்
இனிப்பு ஆப்பிள் - 2
நடுத்தரமான வெள்ளரிக்காய் - 2
எலுமிச்சம் பழச்சாறு - 50 மி.லி
தண்ணீர் - 200 மி.லி
தேன் - 2 தேக்கரண்டி
செய்முறை : ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் இரண்டையும் சிறிதாக அரிந்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி தேன் கலந்து பருகவும்.
பயன்கள் : இந்த குளிர்பானத்தை காலை அல்லது மதிய வேளை உணவு சாப்பிட்ட பின்பு இதனை குடித்து வந்தால் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீராக கரைத்து உடலை விட்டு வெளியேற்றும்.
பலன்கள் : இந்த பானம் உடல் எடை குறைப்பிற்கு சிகிச்சை எடுப்பவர்கள் எடுக்கும் உணவில் இணை உணவாக மதிய வேளை எடுத்துக் கொண்டால் உடலில் உண்டாகியிருக்கின்ற தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com