காச நோயை குணப்படுத்தும் கண்கண்ட நெய்
முதலில் சீரகம், கருஞ்சீரகம், திரிகடுகம் இவை மூன்றையும் பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
தூதுவளை நெய்
தேவையான பொருட்கள்
தூதுவளைச் சாறு - 300 மி.லி
பசும் பால் - 300 மி.லி
சுத்தமான நெய் - 400 மி.லி
சீரகம் - 15 கிராம்
கருஞ்சீரகம் - 15 கிராம்
திரிகடுகம் - 15 கிராம்
Advertisement
Advertisement
செய்முறை : முதலில் சீரகம், கருஞ்சீரகம், திரிகடுகம் இவை மூன்றையும் பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் நெய்யை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக உருக்கி அதனுடன் தூதவளைச் சாறு மற்றும் வடிகட்டி வைத்துள்ள பால் இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலக்கி நன்கு காய்ச்சி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள் : இந்த நெய்யை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் எடுக்கவும். காசநோயினால் உண்டாகும் சுரம், ரத்தமின்மை, இருமல், இரைப்பு ஆகியவற்றை நீக்கும் அற்புதமான நெய் தூதுவளை நெய்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.