stomach burn 
உணவே மருந்து

தீராத வயிற்றுப் புண் மற்றும் வயிறு குத்தல் வலியை குணமாக்கும் கஞ்சி

முதலில் வெந்தயம் , பச்சைப் பயிறு இரண்டையும் முதல்நாள் இரவு ஊறவைத்து விடவும்

கோவை பாலா

தேவையான பொருட்கள்
 
புழுங்கலரிசி - அரை டம்ளர்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பச்சைப் பயிறு - ஒரு தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 4 எண்ணிக்கை
உரித்த பூண்டு - 4 எண்ணிக்கை

செய்முறை : முதலில் வெந்தயம் , பச்சைப் பயிறு இரண்டையும் முதல்நாள் இரவு ஊறவைத்து விடவும். மறுநாள் ஊறவைத்த வெந்தயம், பச்சைப் பயிறுடன், புழுங்கலரிசி , பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்து அனைத்தும் கூழாக ஆனதும் இறக்கி ஆறியவுடன் அதனுடன் தேவையான அளவு உப்பு  மற்றும் மோர் சேர்த்து  குடித்து வரவும். குறைந்தது தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

பயன்கள : இவ்வாறு தயார் செய்த வெந்தயக் கஞ்சியை தீராத வயிற்றுப்புண் மற்றும் வயிறு குத்தல் வலி உள்ளவர்கள் குடித்து வந்தால் அனைத்தும் மாயமாகப் போக்கும் அற்புத கஞ்சி. இதனோடு உணவில் அதிக காரத்தை குறைத்து  இதை அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT